மின் இணைப்பை ஆதாருடன் இணைக்கும் உத்தரவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு 19-ந்தேதிக்கு ஒத்திவைப்பு - ஐகோர்ட் உத்தரவு


மின் இணைப்பை ஆதாருடன் இணைக்கும் உத்தரவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு 19-ந்தேதிக்கு ஒத்திவைப்பு - ஐகோர்ட் உத்தரவு
x

மீட்டர் அடிப்படையில் தான் ஆதார் இணைக்கப்படும் என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

சென்னை,

மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கக் கோரும் உத்தரவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரதன் சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் போது வீட்டு உரிமையாளரின் ஆதாரை மட்டுமே இணைக்க முடியும் என்பதால், அரசின் மானியம் வாடகைதாரருக்கு கிடைக்காது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தரப்பில், வாடகைதாரர்கள் மானியம் பெறும் விஷயம் என்பது உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் இடையிலான விவகாரம் எனவும், மீட்டர் அடிப்படையில் தான் ஆதார் இணைக்கப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை வரும் டிசம்பர் 19-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story