திருவொற்றியூரில் உயர்மட்ட மேம்பாலம்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


திருவொற்றியூரில்  உயர்மட்ட மேம்பாலம்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x

திருவொற்றியூரில் உயர்மட்ட மேம்பாலத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூரில் ரூ 58.64 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

திருவொற்றியூர் மணலி இடையே உள்ள பக்கிங்காம் கால்வாய் மீது போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரூ 58.64 கோடி செலவில் 530 மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டது. ஆனால் 18 மாதங்களில் முடிக்க வேண்டிய இந்த மேம்பால பணி பல்வேறு காரணங்களால் முடிக்கப்படாமல் தாமதமாகியது.

இதனால் வாகன ஓட்டிகள் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் சுற்றிச்சென்று மிகவும் சிரமப்பட்டனர்.இதனை தொடர்ந்து இந்த உயர்மட்ட மேம்பால பணி துரிதப்படுத்தப்பட்டு சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதையடுத்து இந்த உயர்மட்ட கால்வாய் மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு இன்று காலை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


Next Story