உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்


உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்
x

புதுச்சத்திரம் அருகே இரவு நேர விபத்துகளை தவிர்க்க தேசிய நெடுஞ்சாலையில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நாமக்கல்

தேசிய நெடுஞ்சாலை

சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராசிபுரம் அருகே புதுச்சத்திரம் உள்ளது. இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் வழியாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுச்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊருக்குள் செல்லும் பிரதான சாலை செல்கிறது.

அதன் வழியாக நவணி, கண்ணூர்பட்டி, திருமலைப்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் உள்ளன. அதன் வழியாக ஏராளமான கிராம மக்கள் 2 சக்கர வாகனங்களில் பாச்சல், கல்யாணி, ஆண்டகலூர் கேட், ராசிபுரம், களங்காணி, புதன்சந்தை, நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.

உயர்கோபுர மின்விளக்குகள்

குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையும், புதுச்சத்திரத்திற்கு செல்லும் சாலையும் இணையும் இடத்தில் உயர்கோபுர மின்விளக்குகள் இல்லை. எனவே அந்த வழியாக வாகனங்கள் வருவது தெரியாத நிலை உள்ளது. அதனால் புதுச்சத்திரத்தில், மாநில சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உருவாகிறது.

எனவே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புதுச்சத்திரத்திற்கு செல்லும் இணைப்பு சாலைகள் இருக்கும் இடத்தில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. அப்போது தான் சாலையை கடக்க முற்படும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தெரியவரும். எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story