2½ மணி நேரம் மட்டுமே எரியும் உயர்கோபுர மின்விளக்கு
வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் 2½ மணி நேரம் மட்டுமே உயர்கோபுர மின்விளக்குகள் எரிவதால் அப்பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் 2½ மணி நேரம் மட்டுமே உயர்கோபுர மின்விளக்குகள் எரிவதால் அப்பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது.
முத்தாலம்மன் பஜார்
வத்திராயிருப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மதுரை, பேரையூர், தேனி, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் ஆகிய பகுதிகளில் இருந்து வரக்கூடிய பஸ்கள் முத்தாலம்மன் பஜார் வழியாக தான் செல்கிறது.
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் தங்களின் அன்றாட தேவைகளுக்கு இங்கு வருகின்றனா். கிராம மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெறவும் இங்கு வருகின்றனர்.
குற்றச்சாட்டு
இதனால் முத்தாலம்மன் பஜார் பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்தநிலையில் முத்தாலம்மன் பஜார் பகுதியில் உயரகோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது.
கடந்த 3 வாரத்திற்கும் மேலாக இந்த விளக்்குகள் மாலை 6.30 மணி முதல் 9 மணி வரை தான் எரிவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இரவு 9 மணிக்கு மேல் அந்த பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பஜார் பகுதிக்கு வெளியூரிலிருந்து வரும் பொது மக்களும், வியாபாரிகளும் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே பஜார் பகுதியில் உள்ள உயர் கோபுர மின்விளக்குகள் இரவு நேரத்தில் தொடர்ந்து எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.