உயர் கோபுர மின்விளக்கு, டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா
உயர் கோபுர மின்விளக்கு, டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா
தொண்டி,
தொண்டி பேரூராட்சி 10-வது வார்டு மற்றும் மகாசக்திபுரம் 12-வது வார்டில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு டிரான்ஸ்பார்மர், டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பஸ் நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.4.60 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுரமின்விளக்கு திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் தலைமை தாங்கினார். விழாவில் நவாஸ் கனிஎம்.பி., கருமாணிக்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு உயர் கோபுர மின் விளக்கு மற்றும் புதிய டிரான்ஸ்பார்மர்களை தொடங்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் கூறியதாவது, தொண்டி பேரூராட்சியில் சீரான முறையில் மின்வினியோகம் நடைபெற முதல் கட்டமாக இரண்டு டிரான்ஸ்பார்மர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. புதுக்குடி, கடற்கரை, மணிமுத்தாறு பாலம் அருகில் என 3 இடங்களில் ட்ரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார். இந்தநிகழ்ச்சியில் திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ஓடைவயல் ராஜராம், மின்வாரிய செயற்பொறியாளர் இளங்கோ, உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகர் மூர்த்தி, உதவி பொறியாளர் ஜெயகாந்தி, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், நகர தி.மு.க. செயலாளர் இஸ்மத் நானா, நகர் காங்கிரஸ் தலைவர் காத்தராஜா, பேரூராட்சி கவுன்சிலர்கள் தாஸ், அபுதாஹீர், ரஹ்மத்பீவி மைதீன், ஜெனிபர்நிஷா அயூப்கான், ரவிக்குமார், மும்தாஜ் பீவி, செல்வி, பார்த்திபன், ஜமீமாபானு உள்பட பலர் கலந்து கொண்டனர்.