உயர்கோபுர மின்விளக்குகள் தொடக்க விழா
செங்கோட்டை அருகே புதூர் பேரூராட்சியில் உயர்கோபுர மின்விளக்குகள் தொடக்க விழா நடந்தது
தென்காசி
செங்கோட்டை:
தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார் உள்ளூர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மூன்றுவாய்க்கால், சதியன்மேடு, இரவியதர்மபுரம், லாலாகுடியிருப்பு கிராம பகுதிகளில் சுமார் ரூ.16லட்சத்து 80ஆயிரம் மதிப்பீட்டில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டு தொடக்க விழா நடந்தது. புதூர் பேரூராட்சி தலைவர் ரவிசங்கர் தலைமை தாங்கினார்.
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், தென்காசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினா் தனுஷ்குமார் ஆகியோர் உயர்கோபுர மின் விளக்குகளை இயக்கி தொடங்கி வைத்து பேசினார்கள். வார்டு உறுப்பினர்கள் சவுரிமுத்து, ஆனந்தி, மைதீன் சரவணகுமார் மாவட்ட துணை செயலாளர் கென்னடி, மாவட்ட பிரதிநிதி மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story