நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் போராட்டம்


நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் போராட்டம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் சங்கத்தினர் அரியலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் கோட்ட தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். கோட்ட துணைத்தலைவர் மூர்த்தி, கோட்ட இணை செயலாளர்கள் உதயசூரியன், ஆசைத்தம்பி, மாநில செயற்குழு உறுப்பினர் அம்பேத்கர், கோட்ட செயலாளர் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்து படி வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் இறந்தோரின் வாரிசுகளுக்கு நெடுஞ்சாலை துறையிலேயே பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story