மலைவாழ் மக்கள் சாலை மறியல்


மலைவாழ் மக்கள் சாலை மறியல்
x

வந்தவாசியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் பாதியில் நிற்பதை விரைவாக கட்டிமுடிக்க வலியுறுத்தி பழங்குடியின மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் பாதியில் நிற்பதை விரைவாக கட்டிமுடிக்க வலியுறுத்தி பழங்குடியின மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

வீடுகள் கட்ட அனுமதி

வந்தவாசி ஊராட்சி ஒன்றியம் பாதிரி ஊராட்சி பகுதியில் வசிக்கும் பழங்குடி சமூகத்தை சேர்ந்த 6 பயனாளிகளுக்கு கடந்த ஜூன் மாதம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் அதற்கான ஆணை வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் வீடுகள் கட்டும் பணி தொடங்கியது.

இதற்காக மூன்று முறை ஒப்பந்ததாரருக்கு, பயனாளிகள் பணம் கொடுத்துள்ளனர். சுமார் 4 அடி உயரம் வரை கட்டிட பணி நடைபெற்றது. பின்னர் பணிகள் நடைபெற வில்லை என கூறப்படுகிறது.

விரைவாக கட்டி முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்கோரி இன்று வந்தவாசி தாலுகா அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் முறையிடப்பட்டது.

அதற்கு உடனடியாக பயனாளிக்கு பணி ஆணை வழங்குமாறு அதிகாரிகளுக்கு,, உதவி இயக்குனர் (தணிக்கை) உத்தரவிட்டார்.

சாலை மறியல்

இதனால் பயனாளிகள் வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காலை 11.30 மணியிலிருந்து காத்திருந்தனர்.

ஆனால் அவர்களுக்கு, அதிகாரிகள் எந்தவித பதிலும் சொல்லாமல் தாமதம் படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பயனாளிகள் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக பணி அணை வழங்கி, வீடுகட்டும் பணியை விரைவாக முடிப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலைமறியல் கைவிடப்பட்டது.

இந்த சாலை மறியலில் வட்டாரக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் சுகுமார், வட்டார செயலாளர் அப்துல் காதர், வட்டார குழு உறுப்பினர் யாசர் அரபாத், கிளை செயலாளர் ராஜேந்திரன், தமிழ்நாடு மலைவாழ் சங்க மாவட்ட குழு உறுப்பினர் வடிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story