இந்து அறநிலையத்துறை இந்துக்களுக்கு விரோதமாக செயல்படுகிறது


இந்து அறநிலையத்துறை இந்துக்களுக்கு விரோதமாக செயல்படுகிறது
x

இந்து அறநிலையத்துறை இந்துக்களுக்கு விரோதமாக செயல்படுவதாக ராமநாதபுரத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

இந்து அறநிலையத்துறை இந்துக்களுக்கு விரோதமாக செயல்படுவதாக ராமநாதபுரத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

பேட்டி

இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நேற்று ராமநாதபுரம் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்துக்களின் உரிமை எங்கும் மறுக்கப்படுகிறது. அதை மீட்பதற்காக இந்துக்கள் உரிமை மீட்பு பிரசார பயணம் கடந்த 28-ந் தேதி திருச்செந்தூரில் தொடங்கியது. 7-வது நாளாக ராமநாதபுரத்தில் தற்போது நடைபெறுகிறது. வருகிற ஜூலை 21-ந் தேதி சென்னையில் இந்த பிரசார பயணம் முடிவடைய உள்ளது.

இந்து அறநிலையத்துறை இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது. சர்ச்சுகள், மசூதியை அறநிலையத் ்துறை கையில் எடுக்க வேண்டும். இல்லா விட்டால் இந்து கோவில்களை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழகத்தில் காவல் நிலையங்களில் லாக்கப் மரணங்கள் அதிகஅளவில் நடந்து வருவது வேதனைக்கு உரியதாக உள்ளது.

சட்டம்-ஒழுங்கு

கிறிஸ்தவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் மதமாற்றம் செய்ய வலியுறுத்துவதால் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. ராமநாதபுரம் மெல்ல மெல்ல இஸ்லாமியர்களின் கையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த பிரசார பயணம் மூலம் இந்துக்களின் உரிமையை மீட்டெடுக்கவும், மக்களை ஒருங்கிணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உளவுத்துறை கவனமாக செயல்பட்டு தவறான விஷயங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும்.

மதுரை ஆதீனம் இந்து அறநிலையத்துறை குறித்து தெரிவித்துள்ள கருத்து 100 சதவீதம் சரியானது. ஆதீனங்கள் இந்து அறநிலையத் துறையினரால் ஆட்சியாளர்களால் மிரட்டப்பட்டு வருகின்றனர். ஏன் மிரட்டப்படுகின்றனர் என்று தெரியவில்லை. சமீபத்தில் மன்னார்குடி ஜீயர் கோவில் முன் உள்ள பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று தைரியமாக சொல்லி உள்ளார். இதனை இந்து முன்னணி வரவேற்கிறது.

இந்து அறநிலைய துறையினர் கோவிலில் உள்ள தங்கத்தை உருக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி முன்பு சர்க்கரையை எறும்பு தின்று விட்டது சாக்குகளை கரையான் அரித்து விட்டது என்று எப்படி கூறினாரோ அதே போன்று தங்கத்தை உருக்குவதிலும் கதை சொல்லும் நிலை உருவாகி உள்ளது. எனவே கோர்ட்டு உத்தரவை மதித்து தங்கத்தை உருக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

அக்னிபத்

ராணுவத்திற்கு வீரர்களை தேர்வு செய்யும் அக்னிபத் அருமையான திட்டம் அதனை வரவேற்கிறோம். அரசியலுக்காக ஆர்.எஸ்.எஸ். உடன் இணைத்து சிலர் பேசி வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாக பயங்கரவாதம் அதிகரித்து விட்டது. தேனி, கம்பம் போன்ற பகுதிகளில் நக்சல்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

ராமநாதபுரம், திருப்பூர் பகுதிகளில் பங்களாதேசத்தை சேர்ந்த முஸ்லிம்கள் அதிகஅளவில் தங்கி உள்ளனர். இவர் களால் கலவரங்கள் வெடிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே, இதில் உளவுத்துறை கவனமாக செயல்பட்டு சட்டவிரோதமாக தங்கியுள்ள அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அப்புறப்படுத்த வேண்டும் இவ்வாறு கூறினார். மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story