கனிமங்களை பிரித்தெடுக்கும்தொழிற்சாலைதிட்டத்தை கைவிட இந்து முன்னணி கோரிக்கை


கனிமங்களை பிரித்தெடுக்கும்தொழிற்சாலைதிட்டத்தை கைவிட இந்து முன்னணி கோரிக்கை
x
தினத்தந்தி 2 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-03T00:16:44+05:30)

சாத்தான்குளம், குதிரைமொழியில் கனிமங்களை பிரித்தெடுக்கும்தொழிற்சாலைதிட்டத்தை கைவிட இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி

உடன்குடி:

இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 52 மில்லியன் டன் தேரி மணல் இருப்பு உள்ளது. இதிலிருந்து கனிமங்களைப் பிரித்தெடுக்கும் 2 தொழிற்சாலைகளை குதிரைமொழி, சாத்தான்குளம் பகுதிகளில் ரூ.1,500 கோடி முதலீட்டில் நிறுவி, தலா ரூ.1,075 கோடி வருவாய் ஈட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கும், மத்திய அரசின் ஐ.ஆர்.இ.எல்.நிறுவனத்திற்கும் இடையே முதல்-அமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இயற்கை வளங்களை அழித்து அரசின் வருவாயைப் பெருக்குவதால் அடுத்து வரும் தலைமுறையினரின் வாழ்க்கை பாதிக்கும். இரு பகுதிகளிலும் உள்ள தேரிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் மணல் எடுப்பதன் மூலம் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்திலேயே நிலத்தடி நீர் மட்டம் உடன்குடி ஒன்றியத்தில்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலத்தடிநீர் மேம்பாட்டு வாரியம் எச்சரித்துள்ள நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்துவதன் முலம் இப்பகுதி முழுவதும் பாலைவனமாக மாறுவதோடு முழுமையாக விவசாயம். அதன் சார்பு தொழில்கள் அனைத்தும் அழிந்துபோகும். தேரிக்காட்டில் உள்ள புகழ்பெற்ற அய்யனார் கோவில்கள், எண்ணற்ற குலதெய்வக் கோவில்கள், சுனை, குடியிருப்புகள் என அனைத்தும் பாதிக்கப்படும். எனவே இயற்கையையும், விவசாயத்தையும் பாதுகாக்கும் வகையில் இத்திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்' என அவர் ெதரிவித்துள்ளார்.


Next Story