இந்து முன்னணி பேச்சாளர் கைது


இந்து முன்னணி பேச்சாளர் கைது
x

கிறிஸ்தவ மத கடவுளை இழிவாக பேசியதாக இந்து முன்னணி பேச்சாளரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

இந்து முன்னணி சார்பில் இந்து உரிமை மீட்பு பிரசார பயணம் கடந்த 28-ந் தேதி திருச்செந்தூரில் தொடங்கி வருகிற 31-ந் தேதி சென்னையில் நிறைவடைகிறது. இந்த நிலையில் இந்த பயணத்தின் பிரசார பொதுக்கூட்டம் கடந்த 9-ந் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் எதிரே நடந்தது. இதில் இந்து முன்னணி மாநில பேச்சாளர் கோவையை சேர்ந்த சிங்கை பிரபாகரன் கலந்து கொண்டு கிறிஸ்தவ மத கடவுளை இழிவுபடுத்தி பேசியதாக சீர்காழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார், மத கலவரத்தை தூண்டும் விதமாக பேசுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், பீதியை கிளப்பி கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இந்து முன்னணி மாநில பேச்சாளர் பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Related Tags :
Next Story