தடையை மீறி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


தடையை மீறி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Sept 2023 2:45 AM IST (Updated: 30 Sept 2023 2:46 AM IST)
t-max-icont-min-icon

குனியமுத்தூரில் தடையை மீறி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோயம்புத்தூர்
குனியமுத்தூர்


சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியதாக இந்து முன்னணியினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

இதை கண்டித்து கோவை குனியமுத்தூரில் இந்துமுன்னணியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் தசரதன் முன்னிலை வகித்தார்.

இதற்கு மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை தாங்கி பேசும்போது, தமிழக அரசும், காவல்துறையும் இந்து முன்னணியினர் மீது பொய் வழக்கு போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இல்லை என்றால் இந்துக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்பட 300 பேரை போலீசார் கைதுசெய்தனர். இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ், கோட்ட செயலா ளர் பாபா கிருஷ்ணன், மாவட்ட பொது செயலாளர் ஜெய்சங்கர், செய்தி தொடர்பாளர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


1 More update

Next Story