இந்து மக்கள் கட்சி அலுவலகம் திறப்பு


இந்து மக்கள் கட்சி அலுவலகம் திறப்பு
x

திசையன்விளையில் இந்து மக்கள் கட்சி அலுவலகம் திறப்பு விழா நடந்தது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளையில் இந்து மக்கள் கட்சி அலுவலகம் திறப்பு விழா நடந்தது. மாநில முதன்மை செயலாளர் கார்த்தீசன் தலைமை தாங்கினார். இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத், அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் குத்துவிளக்கு ஏற்றி கட்சி கொடியேற்றினார்.

முன்னதாக செல்வமருதூர் ஓடக்கரை செல்வ விநாயகர் கோவிலில் மழை வேண்டி நடந்த சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு திசையன்விளையில் நடந்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில் மாநில அமைப்பு குழு செயலாளர் ஆனந்த், மாநில செயலாளர் வசந்த் குமார், தூத்துக்குடி மாவட்ட தலைவர் கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story