எச்.எம்.எஸ். சங்க மாநாடு


எச்.எம்.எஸ். சங்க மாநாடு
x
தினத்தந்தி 27 Sep 2022 6:45 PM GMT (Updated: 27 Sep 2022 6:46 PM GMT)

தூத்துக்குடியில் எச்.எம்.எஸ். சங்க மாநாடு நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் எச்.எம்.எஸ் மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாநாட்டுக்கு தமிழ்நாடு எச்.எம்.எஸ் உழைப்பாளர் சங்க தலைவர் ராஜலட்சுமி ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். மாநில செயல் தலைவர் சுப்பிரமணிய பிள்ளை மாநாட்டை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக தேசிய தலைவர் ராஜா ஸ்ரீதர் கலந்துகொண்டு பேசினார். துறைமுகம் சத்யா வரவேற்றார். கவுரவ தலைவர் ஓம் சக்தி சங்கர், செயல் தலைவர் மாரியப்பன், மாவட்ட இணை செயலாளர் செல்வம், தமிழ் மாநில தொழிலாளர் நல வாரிய ஆலோசனை குழு உறுப்பினர் சுப்பிரமணியன், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் கணேசன் ஆகியோர் பேசினர்.

மாநாட்டில் தமிழ்நாடு ஹிந்து மஸ்தூர் சபாவின் உழைப்பாளர் சங்க நிர்வாகிகள், ஜெஸ்பர் பிரமநாயகம், ஜெஸ்வின் அழகுராஜ், சுப்புராஜ், கனகுராஜ், கட்டுமான அமைப்பு சாரா பேரவை செயல் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் காந்தி சேகர் நன்றி கூறினார்.


Next Story