நாமக்கல் மாவட்ட ஆக்கி போட்டியில் ராசிபுரம் அரசு பள்ளி மாணவிகள் சாதனை
நாமக்கல் மாவட்ட ஆக்கி போட்டியில் ராசிபுரம் அரசு பள்ளி மாணவிகள் சாதனை
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்ட 17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான ஆக்கி போட்டி ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த போட்டியில் சங்ககிரி சங்கர் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு எஸ்.பி.எம். மெட்ரிக் பள்ளி, பொம்மைக்குட்டை மேடு காமராஜர் மெட்ரிக் பள்ளி, ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
இறுதிப்போட்டியில் ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி அணியானது காமராஜர் மெட்ரிக் பள்ளி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
இந்த பள்ளி மாணவிகள் மாநில ஆக்கி போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் என்.ஆர்.சங்கர், தலைமை ஆசிரியர் மாதேஸ்வரன், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் டாக்டர் கேப்டன் சதாசிவம் ஆகியோர் பாராட்டினர்.