தொடர் கனமழை: தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


தொடர் கனமழை: தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
x
தினத்தந்தி 27 Oct 2022 7:52 AM IST (Updated: 27 Oct 2022 10:11 AM IST)
t-max-icont-min-icon

தொடர் கனமழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி,

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

இந்த நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

1 More update

Next Story