16, 26-ந் தேதிகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை


16, 26-ந் தேதிகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16, 26-ந் தேதிகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டதில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் (டாஸ்மாக் கடைகள்), மதுபானக் கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மது கூடங்கள் அனைத்தும் திருவள்ளுவர் தினமான வருகிற 16-ந் தேதியும், குடியரசு தினமான 26-ந் தேதியும் மூட வேண்டும். அன்றைய தினங்களில் மது விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட அரசு டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story