புனித அலங்கார அன்னை பேராலய தேர்பவனி
கும்பகோணம் புனித அலங்கார அன்னை பேராலய தேர்பவனி இன்று(திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
கும்பகோணம்:
கும்பகோணம் புனித அலங்கார அன்னை பேராலய தேர்பவனி இன்று(திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
ஆண்டு பெருவிழா
கும்பகோணம் காமராஜர் ரோட்டில் புனித அலங்கார அன்னை பேராலயம் உள்ளது. இந்்த பேராலய ஆண்டு பெருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து தினமும் மாலை 6 மணிக்கு திருப்பலியும், சிறிய தேர்பவனியும் , பல்வேறு தலைப்புகளில் அருட்தந்தையர்களால் மறையுரையும் ஆற்றப்பட்டது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை)இலவச மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடந்தது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
தேர்பவனி
விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. முன்னதாக மாலை 6 மணிக்கு ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு புனித அலங்கார அன்னை ஆடம்பர தேர்பவனி நடைபெறுகிறது. நகரின் முக்கிய வீதிகளின் வழியாக தேர் சென்று நள்ளிரவு 1 மணிக்கு ஆலயத்தை வந்தடைகிறதுகாலை 8 மணிக்கு ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சுதந்திர தினவிழா மற்றும் திருப்பலி நடைபெறுகிறது.
கொடியிறக்க நிகழ்ச்சி
மாலை 6 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சியோடு ஆண்டு பெருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அலங்கார அன்னை பேராலய பங்குத்தந்தை பிலோமின்தாஸ், உதவி பங்குத்தந்தை எட்மண்ட் லூயிஸ் மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள், அன்பியங்கள், பிரண்ட்ஸ் ஆப் ஜீசஸ் இளையோர் அணி, மகளிர் அணி, வின்சென்ட்தேபவுல் சபைகள், மரியாயின் சேனை மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.