புனித ஆரோக்கிய மாதா ஆலய பெருவிழா


புனித ஆரோக்கிய மாதா ஆலய பெருவிழா
x

புனித ஆரோக்கிய மாதா ஆலய பெருவிழா நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் புனித ஆரோக்கிய மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் பெருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி 120-வது ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை ஆலய வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் பாளையம் புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை ஜெயராஜ் ஆரோக்கிய மாதா உருவம் பொறித்த கொடியை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து பயண திருஅவையின் பாதுகாவலி அன்னை மரியாள் என்ற தலைப்பில் மறையுரை சிந்தனை நடந்தது. பெருவிழா கொடியேற்றத்தில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் இரவு சிறப்பு திருப்பலி நடைபெறவுள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான அன்னையின் ஆடம்பர சப்பர பவனி வருகிற 7-ந்தேதி இரவு 9 மணிக்கு நடைபெறுகிறது. ஆண்டு பெருவிழா திருப்பலி 8-ந்தேதி காலை 7 மணிக்கு நடைபெற்று பெருவிழா நிறைவு பெறுகிறது.


Next Story