புனித ஆரோக்கியமாதா ஆலய தேரோட்டம்


புனித ஆரோக்கியமாதா ஆலய தேரோட்டம்
x
தினத்தந்தி 8 Sep 2022 8:53 PM GMT (Updated: 8 Sep 2022 8:54 PM GMT)

புனித ஆரோக்கியமாதா ஆலய தேரோட்டம் நடந்தது.

திருச்சி

கல்லக்குடி:

கல்லக்குடி அருகே வடுகர்பேட்டையில் உள்ள, திருச்சி மாவட்ட வேளாங்கண்ணி என்று கிறிஸ்தவர்களால் போற்றப்படும் புனித ஆரோக்கியமாதா ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் முதல் கடந்த 6-ந் தேதி வரை அருட்தந்தையர்கள் தலைமையில் தினமும் மாலை 6.30 மணியளவில் நவநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, வேண்டுதல் சப்பர பவனி நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி மற்றும் புள்ளம்பாடி மறைவட்ட குருக்கள் தலைமையில் திருவிழா ஆடம்பர திருப்பலியை நிறைவேற்றினார்கள். இரவில் ஆடம்பர சப்பரங்களின் பவனி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை அருட்தந்தையர்கள் தலைமையிலும், பின்னர் புள்ளம்பாடி மறைவட்ட முதன்மை குரு சூசைமாணிக்கம் தலைமையிலும் அன்னையின் பிறப்பு பெருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது. மாலையில் தெலுங்கானா குருமட அதிபர் சார்லஸ்பாபு தலைமையில் மாதா சொரூபம் தாங்கிய தமிழ்பண்பாட்டு கலைமிகு தேரோட்டம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.


Next Story