ஊர்க்காவல் படை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை; இறுதிஅஞ்சலி செலுத்திய உறவினரும் சாவு


ஊர்க்காவல் படை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை; இறுதிஅஞ்சலி செலுத்திய உறவினரும் சாவு
x

கூடங்குளம் அருகே, ஊர்க்காவல் படை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு வீட்டுக்கு வந்த உறவினரும் இறந்தார்.

திருநெல்வேலி

கூடங்குளம்:

கூடங்குளம் அருகே, ஊர்க்காவல் படை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு வீட்டுக்கு வந்த உறவினரும் இறந்தார்.

ஊர்க்காவல் படை வீரர்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே செட்டிக்குளம் புதுமனையை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் தினேஷ் (வயது 26). இவர் கடந்த 4 ஆண்டுகளாக கூடங்குளம் பகுதியில் ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக இவர் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை இவர் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காரணம் என்ன?

இதுகுறித்து அவருடைய தந்தை கணேசன் கூடங்குளம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினேசின் அண்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

உறவினர் சாவு

இந்தநிலையில் தினேசுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவரும் இறந்தார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

தினேசின் சித்தப்பா முறையான சுயம்பு என்பவருடைய மகன் வெங்கடேஷ் (33). தையல் தொழிலாளி. இவர் நேற்று தினேஷ் தற்கொலை செய்த தகவல் அறிந்து அவருடைய வீட்டுக்கு சென்றார். அங்கு இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு தனது வீட்டுக்கு வந்தார்.

சில மணி நேரங்களுக்கு பின் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

சோகம்

ஊர்க்காவல் படை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சில மணி நேரங்களில் அவருடைய உறவினர் இறந்த பரிதாபம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story