ஊர்க்காவல் படை காலி பணியிடங்களுக்கான நேர்காணல்
கடலூரில், ஊர்க்காவல் படை காலி பணியிடங்களுக்கான நேர்காணல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் நடந்தது.
கடலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு நேற்று கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நேர்காணல் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜிகுமார், ஊர்க்காவல் வட்டார தளபதி அம்ஜத்கான், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் அருட்செல்வம் ஆகியோர் ஏற்கனவே பணிபுரிந்து வரும் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தி, காலியாக உள்ள பணியிடங்களில் பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இந்த நேர்முக தேர்வில் பணிமூப்பு, பணி வருகை பதிவேடு, தனித்திறன், கவாத்து பயிற்சி அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதில் ஊர்க்காவல் படை சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் மற்றும் எழுத்தர், ஊர்க்காவல் படை கம்பெனி கமெண்டர்கள், ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர்.