நாசரேத்தில் வீடுபுகுந்து ரூ.2 லட்சம் நகை, பணம் கொள்ளை


நாசரேத்தில் வீடுபுகுந்து ரூ.2 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்துசென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

நாசரேத்:

நாசரேத் குயின் தெருவைச் சேர்ந்தவர் டேவிட்சன் ஓசண்ணா. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி சுமதி பிரபா (வயது 49). இவரது தாயார் நெல்லையில் வசித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக சுமதிபிரபாவும், மகளும் ஒரு வாரத்திற்கு முன்பு நெல்லை சென்றனர். வீட்டை கவனிப்பதற்கும், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கும் யாபேஸ் என்பவரின் பொறுப்பில் விட்டு சென்றனர். இந்நிலையில் யாபேஸ் நேற்று காலையில் அந்த வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் நெல்லையிலிருந்து வந்த சுமதி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 2¼ பவுன் தங்க நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இவற்றஇன் மொத்த மதிப்பு ரூ.2லட்சம் ஆகும். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் நாசரேத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராய்ட்சன் வழக்குப் பதிவு செய்து அந்த வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை தேடிவருகிறார்.


Next Story