காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 15 July 2022 3:50 PM GMT (Updated: 15 July 2022 3:51 PM GMT)

பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழாவையொட்டி திண்டுக்கல்லில் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திண்டுக்கல்

காமராஜர் பிறந்தநாள் விழா

பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா, திண்டுக்கல்லில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல்லில் ஏ.எம்.சி. சாலையில் அமைந்துள்ள காமராஜரின் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்படி காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன், மண்டல தலைவர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதேபோல் கிழக்கு மாவட்ட பா.ஜனதா ஓ.பி.சி அணி சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் பா.ஜனதா கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன், ஓ.பி.சி. அணி தலைவர் குமரன், பொதுச்செயலாளர் சிவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் மாநகர தலைவர் ராஜா, செயலாளர்கள் மருதநாயகம், கமலக்கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

எம்.எஸ்.பி. பள்ளி

திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலைநாடார் நினைவு மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு பள்ளி தலைவர் டாக்டர் மதிசெல்வன், தாளாளர் பி.முருகேசன், துணை தலைவர் துரைச்சாமி, பொருளாளர் பட்டுமணி, துணை செயலாளர் கமலநாதன் ஆகியோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இதையடுத்து திண்டுக்கல் ஏ.எம்.சி. சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு எம்.எஸ்.பி. சோலைநாடார் நினைவு மேல்நிலைப்பள்ளி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தாளாளர் முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருமங்கலம் நாடார் இளைஞர் சங்கம்

அதேபோல் திண்டுக்கல் திருமங்கலத்தை சேர்ந்த நாடார் இளைஞர் சங்க தலைவர் சோமசுந்தரம், செயலாளர் சரவணன், பொருளாளர் ஸ்ரீதரன், துணை தலைவர் பூமண்டலம், துணை செயலாளர் ரவீந்திரன் மற்றும் நிர்வாகக்குழுவினர், மாதர் சங்கத்தினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திண்டுக்கல் மாவட்ட நாடார் முன்னேற்ற சங்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் மதி தேவராஜ், செயலாளர் மங்கை ராஜா, துணை தலைவர் நிப்பான் பரமசிவம், பொருளாளர் நாகுசாமி, இணை செயலாளர்கள் சரவணன், சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

திண்டுக்கல் இந்து நாடார் சங்க செயலாளர் நாகுசாமி, பொருளாளர் வேல்முருகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சார்பில் தெற்குரதவீதியில் நடந்த நிகழ்ச்சியில், காமராஜரின் உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கிழக்கு மாவட்ட சிவாஜி மன்ற பொறுப்பாளர் சரவணன், மாநகர துணை தலைவர் சுந்தரமகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மாவட்ட சிவாஜி தலைமை மன்றம் சார்பில் நடந்த விழாவுக்கு மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை தாங்கி, காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், மாவட்ட துணைத்தலைவர் மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பட்டிவீரன்பட்டி

பட்டிவீரன்பட்டி ரேடியோ மைதானத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு கதர் வேட்டி, சட்டை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பேரூராட்சி தலைவர் சியாமளா மாலை அணிவித்தார். இதில், பட்டிவீரன்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் பிரசன்னா, முன்னாள் தலைவர் ராஜாராம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதேபோல் காமராஜர் சிலைக்கு இந்து நாடார்கள் உறவின்முறை, தேசபக்தி யாத்திரை குழு சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சித்தரேவில் ஆத்தூர் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணி மற்றும் காங்கிரசார் கலந்துகொண்டனர்.

கொடைக்கானல்

கொடைக்கானல் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், கொடைக்கானல் மூஞ்சிக்கல், அண்ணாநகர், கலையரங்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது காமராஜர் உருவப்படத்திற்கு காங்கிசார் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில், காங்கிரஸ் நகர, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதேபோல் கொடைக்கானல் மேல்மலை மற்றும் கீழ்மலை பகுதிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


Next Story