சென்னை ரிப்பன் கட்டிடத்தில் மேயர் பிரியா தேசிய கொடி ஏற்றி மரியாதை - பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்


சென்னை ரிப்பன் கட்டிடத்தில் மேயர் பிரியா தேசிய கொடி ஏற்றி மரியாதை - பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்
x

சென்னை ரிப்பன் கட்டிடத்தில் மேயர் பிரியா தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

சென்னை

சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மேயர் பிரியா நேற்று தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மூவர்ண பலூன்களை விண்ணில் பறக்க விட்டும், தேசிய மாணவர் படையினர், சாரண, சாரணியரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகளால் 'விரயத்தில் இருந்து பெரும் வியப்பு' என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட கலைநயமிக்க கண்காட்சியை பார்வையிட்டதோடு, கண்கவரும் கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தார். இந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

இதையடுத்து மாநகராட்சியில் அதிக சொத்துவரி செலுத்தியவர்கள் மற்றும் முறையாக உரிய காலக்கெடுவுக்குள் சொத்துவரி செலுத்திய சொத்து உரிமையாளர்களை பாராட்டி கடிதங்களை வழங்கினார். மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய 81 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களையும் மேயர் பிரியா வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story