கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 July 2023 3:59 PM GMT (Updated: 15 July 2023 4:00 PM GMT)

சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா இன்று தனது 102-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

அந்த வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து பதிவில், "பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் 'தகைசால் தமிழர்' சங்கரய்யாவின் 102-வது பிறந்தநாள்! பொதுவாழ்விலும் பொதுவுடைமை லட்சியங்களைக் கடைப்பிடிப்பதிலும் நம் எல்லோருக்கும் வழிகாட்டியாக விளங்கும் அவர் நலமுடன் வாழிய பல்லாண்டு" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் சங்கரய்யாவுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மூலம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது அறிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சங்கரய்யாவுக்கு தமிழக அரசு 'தகைசால் தமிழர்' விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.




Next Story