கவுரவ விரிவுரையாளர்கள் கண்ணைக்கட்டி போராட்டம்


கவுரவ விரிவுரையாளர்கள் கண்ணைக்கட்டி போராட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2023 7:30 PM GMT (Updated: 2023-01-25T01:01:03+05:30)
நாமக்கல்

ராசிபுரம்:-

ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட் திருவள்ளுவர் அரசு கலை கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் யு.ஜி.சி. நிர்ணயித்த ஊதியத்தை வழங்கிட வேண்டும். மாநில தகுதி தேர்வை உடனடியாக நடத்திட வேண்டும். கவுரவ விரிவுயாளர்களுக்கு பணி பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். அரசு ஆணை 56-ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி உணவு இடைவேளையின் போது கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு வாயில் முழக்க போராட்டம் நடத்தினர். வாயில் முழக்க போராட்டத்திற்கு சங்க தலைவர் கிருபானந்த், செயலாளர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கவுரவ விரிவுரையாளர்கள் 35 பேர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story