அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் 5-வது நாளாக ஆர்ப்பாட்டம்


அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் 5-வது நாளாக ஆர்ப்பாட்டம்
x

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் 5-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 5-வது நாளாக கல்லூரி வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

தி.மு.க. தேர்தல் வாக்குறுதியின் படி கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழக அரசு அரசாணை 56-ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் 2006-ம் ஆண்டு அமல்படுத்திய வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைப்படி நிர்ணயித்த ஊதியத்தினை உடனடியாக வழங்க வேண்டும். உதவி பேராசிரியருக்கான மாநில தகுதி தேர்வை தொடர்ந்து நடத்த வேண்டும். கவுரவ விரிவுரையாளர்களின் பணிப்பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ேடாம். இவ்வாறு அவர்கள் கூறினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கவுரவ விரிவுரையாளர்கள் பங்கேற்றனர். போராட்டம் தொடர்ந்து நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.


Next Story