கறம்பக்குடி அரசு கல்லூரி முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்


கறம்பக்குடி அரசு கல்லூரி முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

பணி நிரந்தரம் செய்யக்கோரி கறம்பக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

கவுரவ விரிவுரையாளர்கள்

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். உரிய கல்வி தகுதிகளை பெற்றிருந்தும் தற்காலிக பணி அடிப்படையிலேயே இவர்களுக்கு சொற்ப ஊதியம் வழங்கப்படுகிறது.

இதையடுத்து, பணி பாதுகாப்பு கேட்டும், பணிநிரந்தரம் செய்யக்கோரியும் கவுரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம்

இந்தநிலையில் கறம்பக்குடி அருகே மருதன்கோன்விடுதியில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் பணிநிரந்தரம் செய்யக்கோரி நேற்று கல்லூரி நுழைவுவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கறம்பக்குடி கிளை தலைவர் பிச்சைமுத்து தலைமை தாங்கினார். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story