அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் - டாக்டர் ராமதாஸ்


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் - டாக்டர் ராமதாஸ்
x

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்ற கோரிக்கை ஒவ்வொரு ஆண்டும் வருகிறது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் சார்ந்த இந்த சிக்கலுக்கு தீர்வு காண தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது.

கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான நியாயங்களை பலமுறை பட்டியலிட்டுள்ளேன். அவற்றை மீண்டும், மீண்டும் நினைவுபடுத்த தேவையில்லை. மாணவ செல்வங்களுக்கு கற்பிக்கும் கவுரவ விரிவுரையாளர்கள், தங்களின் கோரிக்கைகளுக்காக சாலையில் இறங்கி போராடும் நிலையை அரசே உருவாக்கக்கூடாது.

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல்லாயிரக்கணக்கான காலியிடங்கள் உள்ளன. எனவே, இனியும் தாமதிக்காமல், கவுரவ விரிரையாளர்களில் தகுதியுடைய அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்யவேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு நீண்ட காலமாக தாமதிக்கப்பட்டு வரும் நீதியை, இனியும் தாமதிக்காமல் வழங்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story