தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நீதிபதிகள் ஆய்வு


தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நீதிபதிகள் ஆய்வு
x

தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர்

தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அரசு ஆஸ்பத்திரி

தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி பாலு, தாராபுரம் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி எஸ்.பாபு ஆகியோர் நேற்று மதியம் வந்தனர். பின்னர் தலைமை மருத்துவர் டாக்டர் சிவபாலன் மற்றும் டாக்டர் குழுவினருடன் ஆஸ்பத்திரியில் பெண்கள் பொது வார்டு, பிரசவ வார்டு, குழந்தைகள் வார்டு, ஆப்ரேசன் தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தாராபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைதானவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு வரும் போது குறிப்பாக 18 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு செய்யப்படும் மருத்துவ பரிசோதனைகள் குறித்து டாக்டர்கள் குழுவினரிடம் நீதிபதிகள் கேட்டறிந்தனர்.

பாதுகாப்பு

இதில் டாக்டர்கள் சத்யராஜ், பெரியசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார்கள் கலந்து கொண்டனர். நீதிபதிகளின் ஆய்வை முன்னிட்டு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேல் தலைமையில் அரசு ஆஸ்பத்திரி நுழைவு வாயில் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Related Tags :
Next Story