ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: கரையோர கிராம மக்களுக்கு வருவாய் துறையினர் எச்சரிக்கை


ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு:  கரையோர கிராம மக்களுக்கு வருவாய் துறையினர் எச்சரிக்கை
x

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: கரையோர கிராம மக்களுக்கு வருவாய் துறையினர் எச்சரிக்கை

கிருஷ்ணகிரி

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர கிராம மக்களுக்கு வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகள், ஓசூர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று அணைக்கு வினாடிக்கு 1,042 கனஅடி தண்ணீர் வந்தது.

அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 908 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணையின் முழு கொள்ளளவு 44.28 அடி ஆகும். தற்போது அணையில் நீர் இருப்பு 41.98 அடியாகும். அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் தாழ்வான பகுதிகளிலும், கரையோரத்திலும் மற்றும் அணையை சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

விவசாயிகள் கவலை

தென்பெண்ணை ஆற்றில் கால்நடைகளை குளிப்பாட்டவோ, கால்நடைகளுடன் ஆற்றை கடக்கவோ கூடாது என வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, அணை நீருடன் கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகளும் கலந்து நுரை பொங்கி குவியல், குவியலாக வெளியேறுவதால், விவசாயிகளும், பொதுமக்களும் கவலை அடைந்துள்ளனர்.

1 More update

Next Story