நொய்யல் ஆற்றின் கரையோர வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
திருப்பூர் சாயப்பட்டறை வீதியில் நொய்யல் ஆற்றின் கரையோர வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
திருப்பூர் சாயப்பட்டறை வீதியில் நொய்யல் ஆற்றின் கரையோர வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
நொய்யல் ஆறு
திருப்பூர் நடராஜா தியேட்டர் ரோடு நொய்யல் ஆற்றின் கரையோரம் சலவைப்பட்டறை வீதியில் அரசு ஓடை புறம்போக்கு நிலத்தில் 92 வீடுகள் இருப்பதாக பொதுப்பணித்துறை ஆவணத்தில் உள்ளன. அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யும் பணி நடக்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அங்கு 135 குடிசை வீடுகள் இருந்தது கண்டறியப்பட்டது. முறையாக கணக்கெடுப்பு செய்து அவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்து காலி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று காலை மாநகராட்சி உதவி ஆணையாளர் வாசுகுமார் மற்றும் உதவி பொறியாளர் கோவிந்தபிரபாகர் மற்றும் அதிகாரிகள் சாயப்பட்டறை வீதிக்கு சென்று வீடுகளை காலி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 56 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யும் பணி நடக்கிறது. அதில் 4 பேர் வீடுகளை காலி செய்தனர்.
வீடுகள் இடித்து அகற்றம்
அந்த வீடுகளை அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள். மேலும் வீடு ஒதுக்கீடு செய்வதில் உள்ள குறைகள் குறித்து அங்கிருந்தவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். அவற்றை முறைப்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.