வீடு புகுந்து பெண்ணிடம் தங்க நகை பறிப்பு


வீடு புகுந்து பெண்ணிடம் தங்க நகை பறிப்பு
x

பேராவூரணியில் வீடு புகுந்து பெண்ணிடம் தங்க நகை பறிக்கப்பட்டது.

தஞ்சாவூர்

பேராவூரணி:

பேராவூரணி ெரயில் நிலையம் அருகே வசித்து வருபவர் விக்னேஷ். இவருடைய மனைவி பவித்ரா (வயது26). நேற்று முன்தினம் விக்னேஷ் வெளியூர் சென்றுள்ளார். பவித்ரா தனது மாமியார் மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டில் புகுந்த மர்ம நபர் பவித்ரா கழுத்தில் அணிந்திருந்த தாலி, காசு மற்றும் குழந்தையின் வெள்ளி கொலுசு ஆகியவற்றை பறித்து கொண்டு சென்று விட்டான். இதுகுறித்து பவித்ரா கொடுத்த புகாரின் பேரில் பேராவூரணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.


Next Story