வீட்டில் தீ விபத்து; கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு


வீட்டில் தீ விபத்து; கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு
x

நந்திவரத்தில் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கியாஸ் சிலிண்டர் வெடிதத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு

தீப்பிடித்து எரிந்தது

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட நந்திவரம் காந்திநகர், முதல் தெருவை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 75). ஓய்வு பெற்ற கிராம நர்சு. இவர் நேற்று மாலை வீட்டில் உள்ள ஒரு அறையில் புத்தகம் படித்து கொண்டிருந்தார். 6 மணி ஆகிவிட்டதால் வீட்டின் தெரு விளக்கை ஆன் செய்வதற்காக வெளியே வந்த போது வீட்டின் பக்கவாட்டில் உள்ள ஒரு அறையில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதனை பார்த்த சுப்புலட்சுமி உடனே வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து கூச்சலிட்டு கத்தினார்.

அவரது சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது கரும்புகை வந்த இடத்தில் மின்கசிவால் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இது குறித்து அந்த பகுதயை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் பிரகாஷ் மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.

கியாஸ் சிலிண்டர் வெடித்தது

அப்போது வீட்டுக்கு ஒதுக்குப்புறமாக வைக்கப்பட்டிருந்த முழு கொள்ளளவு கொண்ட ஒரு கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதனால் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள், சைக்கிள், ஏ.சி., வாஷிங் மெஷின், படுக்கை அறையில் இருந்த பெட் உள்பட அனைத்து பொருட்களும் எரிந்தது. கியாஸ் சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டவுடன் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story