வீடு புகுந்து 2¼ பவுன் நகை திருட்டு


வீடு புகுந்து 2¼ பவுன் நகை திருட்டு
x

வீடு புகுந்து 2¼ பவுன் நகைகளை திருடிசென்ற மர்மநபர்களை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ் (வயது 52). நேற்று முன்தினம் நள்ளிரவு இவரது வீட்டில் புகுந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 2¼ பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


Next Story