காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி
திருவண்ணாமலையில் இளம் தளிர் அமைப்பு சார்பில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடந்தது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை போளூர் சாலையில் இளம் தளிர் அமைப்பு சார்பில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 1500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் காலநிலை மாற்றம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் பிரேம்குமார், திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் சரவணன், மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதி,
எம்.எம்.எஸ். சிறப்பு குழந்தைகள் பள்ளி நிர்வாகி மோகன், சரஸ்வதி, இளம் தளிர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் விஜய், கோபி, பார்த்திபன், ராஜா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story