மனுநீதி நாள் முகாம்
திருவேங்கடம் அருகே மனுநீதி நாள் முகாம் நடந்தது.
தென்காசி
திருவேங்கடம்:
திருவேங்கடம் தாலுகா குளக்கட்டாக்குறிச்சி மற்றும் சுந்தரேசபுரம் கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் சுந்தரேசபுரம் கிராமத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன் தலைமை தாங்கி, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் (பொறுப்பு) ராஜ மனோகரன், திருவேங்கடம் தாசில்தார் ரவீந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஓசனா பெர்னாண்டோ, குடிமைப்பொருள் வழங்கல் தாசில்தார் திருநாவுக்கரசு, யூனியன் தலைவர் ஜெயலட்சுமி, வட்டார கல்வி அலுவலர்கள் சீனிவாசன், சந்திரசேகர் மற்றும் வேளாண்மை, தோட்டக்கலை, சமூக நலத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் திருவேங்கடம் வருவாய் ஆய்வாளர் குமாரபாண்டியன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story