மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு


மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 11 Dec 2022 12:15 AM IST (Updated: 11 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

ஆண்டுதோறும் டிசம்பர் 10-ந்தேதி உலகம் முழுவதும் மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது. கலாசாரம், சமூகம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சாத்தியமான அனைத்து சூழல்களிலும் சமூகத்தின் நலனை உறுதிப்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையர் சாருஸ்ரீ தலைமையில் அனைத்து பிரிவு பணியாளர்களும் மனித உரிமைகள் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

1 More update

Next Story