மனித-வனவிலங்கு மோதல் விழிப்புணர்வு முகாம்


மனித-வனவிலங்கு மோதல் விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 16 Sept 2023 4:15 AM IST (Updated: 16 Sept 2023 4:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே மனித-வனவிலங்கு மோதல் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின்படி, கீழ்கோத்தகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட தேனாடு கிராமத்தில் தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் கீழ் கோத்தகிரி வனச்சரகர் ராம் பிரகாஷ் மற்றும் வனத்துறையினர் கலந்துகொண்டு மனித-வனவிலங்கு மோதல் எதனால் நிகழ்கிறது, அதை தடுக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? என்பது குறித்து விளக்கி பேசினர். மேலும் பொதுமக்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு வனத்துறையினர் பதிலளித்தனர். முகாமில் தேனாடு, கோக்கால் கிராம பொதுமக்கள், தேனாடு அரசு ஆரம்ப பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து மெட்டுக்கல் பழங்குடியின கிராமத்திலும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் மெட்டுக்கல் ஆதிவாசி கிராம மக்கள், மெட்டுக்கல் அரசு ஆரம்ப உண்டு உறைவிட பள்ளி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் சோலை மர நாற்றுகள் வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story