தியாகதுருகத்தில்மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தியாகதுருகத்தில்மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 July 2023 12:15 AM IST (Updated: 30 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி


தியாகதுருகம்,

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தியாதுருகம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் பசல் முகமது தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ் கலந்துகொண்டு பேசினார். தொடர்ந்து மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும், பா.ஜ.க. அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


Next Story