மனிதநேய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்


மனிதநேய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்
x

மனிதநேய ஜனநாய கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:-

நபிகள் நாயகத்தை அவதூறாக பேசிய நபர்களை கண்டித்தும், அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கிருஷ்ணகிரி மாவட்ட மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் ஓசூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓசூர் காமராஜர் காலனியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முகமது ஆரிப் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சையத் நவாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் அமீன் சிக்கந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் இக்ரம் அகமது, சையத் நிசார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநகர செயலாளர் முகமது உமர் நன்றி கூறினார். பின்னர், தமிமுன் அன்சாரி நிருபர்களிடம் கூறுகையில், மத உணர்வை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அக்னிபத் இந்திய ராணுவத்தின் கவுரவத்தை சீர்குலைக்கும் செயலாகும். இதனை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். எதிர்க்கட்சிகள், தங்கள் கோபங்களை மறந்து இந்தியாவின் ஜனநாயகத்தையும், எதிர்காலத்தையும் பாதுகாக்கும் நோக்கத்துடன், ஓரணியில் திரள வேண்டும் என்றார்.


Next Story