ரூ.26.70 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்


ரூ.26.70 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்
x

ரூ.26.70 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா திருவெற்றியூரில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பாகம் பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி திருக்கோவிலில் நேற்று உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரொக்கம் ரூ.26 லட்சத்து 70 ஆயிரத்து 630, தங்கம் 219 கிராம், வெள்ளி 514 கிராம் ஆகியவை பக்தர்கள் காணிக்கையாக கிடைத்தது. உண்டியல் எண்ணும் பணியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் செந்தில்குமார், அறநிலையத் துறை ஆய்வாளர் சண்முக சுந்தரம், கவுரவ கண்காணிப் பாளர் சுந்தரராஜன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story