கணவர் கைது
குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்த வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டார்
திருநெல்வேலி
தேவர்குளம்:
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 30). இவருடைய மனைவி பிரவீனா (25). இவர்களுக்கு 1½ வயதில் அகிமா என்ற மகள் இருந்தாள். இந்த நிலையில் பிரவீனா அருகில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு தனது குழந்தை அகிமாவை கொன்று, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நெல்லை ஊரக உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்தராஜ் விசாரணை நடத்தி, பிரவீனாவை கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் மகேந்திரனை நேற்று கைது செய்தார்.
Related Tags :
Next Story