வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது


வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
x

புதுப்பேட்டை அருகே பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

புதுப்பேட்டை,

புதுப்பேட்டை அருகே ஏ.பி.குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுமன்ராஜ் (வயது 31). இவரது மனைவி சிவரஞ்சனி (30). இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் கடந்த ஜனவரி 13-ந் தேதி சிவரஞ்சனி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது தந்தை கந்தசாமி வரதட்சணை கொடுமையால் தனது மகள் சிவரஞ்சனி இறந்து விட்டதாக புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கைது

திருமணமான 3 ஆண்டுகளிலேயே சிவரஞ்சனி இறந்ததால் அவரது சாவு குறித்து கடலூர் கோட்டாட்சியர் மேல் விசரணை நடத்தி வந்தார். விசாரணையில் சுமன்ராஜ் வரதட்சணை கேட்டு தனது மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதன்காரணமாக சிவரஞ்சனி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இதையடுத்து புதுப்பேட்டை போலீசார், சிவரஞ்சனியை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி சுமன்ராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story