கர்ப்பிணியை கத்தியால் குத்திய கணவர் கைது


கர்ப்பிணியை கத்தியால் குத்திய கணவர் கைது
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்ப்பிணியை கத்தியால் குத்திய கணவர் கைது

கோயம்புத்தூர்

நெகமம்

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பித்கார் மாந்தி(வயது 35). இவருடைய மனைவி மம்தாதேவி(34). கணவன்-மனைவி 2 பேரும், நெகமம் அருகே கொண்டேகவுண்டன்பாளையத்தில் தங்கியிருந்து, அங்குள்ள ஒரு தனியார் நார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகள், 3 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மம்தாதேவி மீண்டும் கர்ப்பம் ஆனார். அவர் நேற்று தனது கணவரிடம் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை கடைக்கு சென்று வாங்கி வர கூறினார். ஆனால் பித்கார் மாந்தி மளிகை பொருட்களை வாங்கி வராமல், அதற்கு உரிய பணத்துக்கு மது வாங்கி குடித்துவிட்டு வந்ததாக தெரிகிறது. இதை மம்தாதேவி கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பித்கார் மாந்தி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மம்தாதேவியின் தொடையில் குத்தினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பித்கார் மாந்தியை கைது செய்தனர்.


Next Story