பெண்ைண உயிரோடு எரித்து கொல்ல முயன்ற கணவன் கைது
உடுமலையில் பெண்ணை உயிரோடு எரித்துக்கொல்ல முயன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தீக்காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி
திருப்பூர் மாவட்டம், உடுமலை யு.எஸ்.எஸ். காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி மல்லிகா (வயது 32). இவர்களுக்கு திவ்யா, பிரசன்னா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். மல்லிகா தனது கணவர் செல்வராஜூடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி மல்லிகா தனது கணவர் செல்வராஜின் வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பின்னர் 7-ந் தேதி மாலை அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மல்லிகாவை தீக்காயத்துடன் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிலர் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கணவர் கைது
இது குறித்து வழக்குப்பதிவு செய்த உடுமலை போலீசார் செல்வராஜிடம் விசாரணை நடத்தினார்கள். அதில், மல்லிகா மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார். ஆனால், மல்லிகா கொடுத்த வாக்குமூலத்தில், தனது கணவர் மண்எண்ணெயை தன் மீது ஊற்றி எரித்துக்கொல்ல முயன்றதாக கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து போலீசார் செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.