ஹுண்டாய்: வாடிக்கையாளர்கள் வீடு தேடி செல்லும் 'கிராண்டு i10 NIOS ஃபுளோட் வேன்' நடமாடும் விளம்பர பரப்புரை வாகனம் அறிமுகம்


ஹுண்டாய்:  வாடிக்கையாளர்கள் வீடு தேடி செல்லும் கிராண்டு i10 NIOS ஃபுளோட் வேன்  நடமாடும் விளம்பர பரப்புரை வாகனம் அறிமுகம்
x

கிராமப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வீட்டு வாசல் அருகிலேயே கிராண்டு i10 NIOS காருக்கான சோதனை ஓட்ட அனுபவத்தை வழங்குவதற்கு நடமாடும் விளம்பர பரப்புரை வாகனம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

கார் தயாரிப்பில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமான ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட், 'கிராண்டு i10 NIOS ஃபுளோட் வேன்' என்ற நடமாடும் விளம்பர பரப்புரை வாகனத்தை திங்கட்கிழமையன்று அறிமுகம் செய்திருக்கிறது. இந்தியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வீட்டு வாசலிலேயே இந்த சிறப்பான காரை டெஸ்ட் டிரைவ் (சோதனை ஓட்டம்) செய்து நேரடி அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதே ஹுண்டாய் மோட்டார்ஸ் இச்செயல்திட்டத்தை தொடங்கியிருப்பதன் நோக்கமாகும்.

இந்தியாவின் இலட்சக்கணக்கான கிராமங்களில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயமும், கிராமங்களும் இருக்கின்ற சூழலில் கிராமங்களிலும் மற்றும் தாலுகாவின் பெரிய ஊர்களிலும் தனது தயாரிப்புகள் சென்றடைய வேண்டும் என்ற இலக்கை அடைய இந்த புதுமையான செயல்திட்டம் நிச்சயம் உதவும் என்று ஹுண்டாய் மோட்டார்ஸ் கருதுகிறது. ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மிகச்சிறந்த தயாரிப்புகளுள் ஒன்றான, கிராண்டு i10 NIOS பிராண்டு குறித்து கிராமப்புற இந்தியாவில் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கு தமிழ்நாடெங்கிலும் இந்த விளம்பர பரப்புரைக்கான நடமாடும் வாகனம் செல்வதற்காக மொத்தத்தில் 100+ தொடுமுனைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கிராமப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வீட்டு வாசல் அருகிலேயே கிராண்டு i10 NIOS காருக்கான சோதனை ஓட்ட அனுபவத்தை டீலர்ஷிப்கள் வழங்குவதற்கு இந்த நடமாடும் ஃபுளோட் வேன் உதவும். அத்துடன், காரை வாங்குவதற்கான நிதியுதவி திட்டங்களை பற்றி அறிந்து அவைகளைப் பெறவும் மற்றும் தங்களிடமுள்ள பழைய கார்களை மதிப்பீடு செய்து, எக்ஸ்சேஞ்ச் செய்வதற்கும் அவசியமான தகவலை இந்த நடமாடும் வாகனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.


Next Story