என்னுடைய நிலைப்பாட்டை அறிக்கை மூலம், விரைவில் தெரிவிக்க உள்ளேன் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
என்னுடைய நிலைப்பாட்டை அறிக்கை மூலம், விரைவில் தெரிவிக்க உள்ளேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
பெரியகுளம்,
கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்றும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்து உள்ளது. இதனால் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், ஓபிஎஸ் தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது முதலே தேனி பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு அவரது ஆதரவாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர். தொடர்ந்து ஓபிஎஸ்ஸை அவரது இல்லத்தில் முக்கிய ஆதரவாளர்கள், தேனி மாவட்ட நிர்வாகிகள் சந்தித்துப் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் தேனியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- "ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். என்னுடைய நிலைப்பாட்டை அறிக்கை மூலம், விரைவில் தெரிவிக்க உள்ளேன்" என்று கூறினார்.