நாடாளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியிலும் நான் போட்டியிடவில்லை: சீமான் பேட்டி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்
நெல்லை,
நெல்லையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
"நாடாளுமன்ற தேர்தலில் எப்போதும் யாருடனும் கூட்டணி இல்லை. என் மக்களை ரொம்ப நேசிக்கிறேன். நம்புகிறேன். நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். நாடாளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியிலும் நான் போட்டியிடவில்லை. சட்டமன்ற தேர்தலில் நான் உறுதியாக போட்டியிடுவேன்.
நரேந்திர மோடி பிரதமராவதை தடுக்கக்கூடிய வலிமை எங்களிடம் இல்லை. ஆனால், காங்கிரஸ், பாஜகவை தமிழகத்திற்கு விட அனுமதிக்க மாட்டேன். அவர்களை எதிர்ப்பேன்." என்றார்.
"மோடி இந்தியாவின் பிரதமராவதை தடுக்கும் வலிமை எனக்கு இல்லை" சீமான் பரபரப்பு பேச்சு#pmmodi #PrimeMinister #India #seeman #ntk #thanthitv pic.twitter.com/S8NftQBRZS
— Thanthi TV (@ThanthiTV) January 27, 2024
Related Tags :
Next Story